தீயணைப்பு பணிகளில் ரோபோட் பயன்படுத்த திட்டம் - தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி

தீயணைப்பு தடுப்பு பணிகளில் ரோபோட்ஸ் பயன்படுத்த திட்டம் - தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி - பி.கே.ரவி தகவல்

தீயணைப்பு பணிகளில் ரோபோட் பயன்படுத்த திட்டம் - தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தமிழக தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் டி.ஜி.பி. பி.கே.ரவி  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்து வருவதாகவும், குறுகலான தெருக்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க 25 சிறிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சிறிய தெருக்களில் தீயணைப்பு தடுப்புகளில் ரோபோட்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்து, இது குறித்து அரசுக்கு அறிக்கை மற்றும் திட்டமதிப்பீடு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.