கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி... அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான பரிதாபம்...

5 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், விரக்தியில் ஆட்சியர் அலுவலகத்திலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்த விவசாயி அமல்ராஜ், போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி... அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான பரிதாபம்...

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அமல்ராஜ் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். ஆனால் தன் வீட்டு பட்டாவை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நபருக்கு அதிகாரிகள் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தனக்கு பட்டா வழங்க கோரியும் விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை.

இந்த நிலையில் மனம் வெறுத்துப்போன அமல்ராஜ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இரண்டாவது தளத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். பல மணி நேரத்திற்கு பிறகு அதை பார்த்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். கடந்த இரண்டு தினங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

தான் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஐந்து ஆண்டுகளாக அலைக்கழித்த அதிகாரிகளை கண்டித்து விஷம் குடித்து ஆட்சியர் அலுவலகத்திலேயே விவசாயி இறந்து போன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.