அண்ணல் அம்பேத்கருக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

அண்ணல் அம்பேத்கர் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .

அண்ணல் அம்பேத்கருக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

அம்பேக்தரின் 66ம் ஆண்டு நினைவு தினம்

டாக்டர் அம்பேக்தரின் 66ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இன்று டாக்டர் அம்பேக்தரின் 66ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு   பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் டாக்டர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.