பொங்கல் லீவு விட்டாச்சு- தீவு திடலில் பொதுமக்கள் கூட்டம்

பொங்கல் லீவு விட்டாச்சு- தீவு திடலில் பொதுமக்கள் கூட்டம்

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் அமைக்கப்பட்டிருக்கக் கூடிய சுற்றுலா பொருட்காட்சியை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர்

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் கடந்த 4 தேதி தொடங்கியது. கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த பொருட்காட்சி இந்த ஆண்டு தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் பொருட்காட்சி தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்டது. 

இந்த கண்காட்சியில், தீயணைப்புத் துறை, ஆவின், மெட்ரோ ரயில், மின்சார வாரியம், சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகள் என 48 துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும், 20 ஆயிரம் சதுர அடிபரப்பளவில் பேய் வீடு, 3டி திரையரங்கம், டெக்னோ ஜம்ப், ஸ்கிரீன் டவர், ராட்சத ராட்டினம், நவீன கேளிக்கை சாதனங்கள், பனிக்கட்டி உலகம், சிறுவர் ரயில், மீன் காட்சியகம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்டபல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களின் பொழுதுகளை கழிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 இந்த பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 40 ரூபாயும் சிறுவர்களுக்கு 25 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க|  மகப்பேறு சலுகைகளை வழங்க மறுக்க முடியாது - உயர்நீதி மன்றம்

பொங்கல் வரையிலும் காலை 10 மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் இதே நேரம் வரை தொலைக்காட்சி தேர்ந்தெடுக்கும் எனவும் மற்ற நாட்களை பொருத்தவரையிலும் மாலை 3 மணியிலிருந்து இரவு 10 வரை என பொருட்காட்சி மார்ச் மாதம் 8-ம் தேதி வரை 70 நாட்கள் நடைபெற உள்ளது.

இன்று போகி, நாளை பொங்கல், நாளை மறு மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் குடும்பங்களுடன் பொருட்காட்சிக்கு வந்து இங்கு இருக்கக்கூடிய அரங்கங்களை சுற்றி பார்த்து விளையாட்டு திடல்களில் குழந்தைகளுடன் மகிழ்ந்