இன்று உதகைக்கு செல்கிறார் குடியரசு தலைவர்...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்கிறார்.

இன்று உதகைக்கு செல்கிறார் குடியரசு தலைவர்...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்கிறார்.

இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார். பின்னர், நாளை உதகை ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து, நாளை மறுதினம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடும் அவர், 6ஆம் தேதி கோவை சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

குடியரசு  தலைவரின் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் முழுவதும்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கோவையில் ஆகஸ்ட் ஆறாம் தேதிவ் வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உதகையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, நாமக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களிருந்து சுமார் 1300 க்கும் மேற்பட்ட போலீசார் நீலகிரியில் குவிக்கப்பட்டுள்ளனர்.