கட்டுக்குள் வராத காய்கறிகளின் விலை... திண்டாட்டத்தில் இல்லத்தரசிகள்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கட்டுக்குள் வராத காய்கறிகளின் விலை... திண்டாட்டத்தில் இல்லத்தரசிகள்...

தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி விலை கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் இதர காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ. 40-க்கு மேல் விற்கப்படுகின்றன.

குறிப்பாக, முருங்கை 150 ரூபாய்க்கும், கேரட் 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய், அவரைக்காய் 80 ரூபாய்க்கும், கோவைக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மழை ஓய்ந்து போக்குவரத்து சீரானதும் விலை கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் கூறிய நிலையில், மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என கூறப்படுகிறது.