பிரதமர் மோடி சென்னை வருகை : ஏழு அடுக்கு பாதுகாப்பு! 25 நிமிடங்கள் தடை!!!

பிரதமர் மோடி சென்னை வருகை : ஏழு அடுக்கு பாதுகாப்பு! 25 நிமிடங்கள் தடை!!!

பிரதமர் மோடி சென்னை வருகையொட்டி மீனம்பாக்கம் விமான நிலையம் ஏழு அடுக்கு பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.விமான நிலைய மேம்பாலத்தில் செல்ல பகல் 2.50 மணியில் இருந்து 3. 15 வரை சுமார் 25 நிமிடங்கள் தடை விதிக்கப்படுகிறது,அந்த நேரம் மேம்பால பாதை மூடப்படுகிறது. பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது


பிரதமர் வரும் போது சென்னை விமான நிலையத்துக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் முன்கூட்டியே சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று மாலை திறக்க உள்ள நிலையில் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விமான நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம்  
2.36 லட்சம் சதுர மீட்டரில் இந்த புதிய முனையத்தின் முதல் கட்ட பணிகள் 1,260 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளனர் இந்த முனையத்தை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார். இதனை அடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்து பாதுகாப்பு பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர். விமான நிலையத்தில் பொதுவாக 450 க்கும் அதிகமான சி.எஸ்.ஐ.எப் எனப்படக்கூடிய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தற்போது கூடுதலாக 200 வீரர்கள் இன்று பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் பயணிகள் உடமைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கின்றனர்.

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சையில் திமுக அமைச்சர்...நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி எறிந்து ஆவேசம்!

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு 'லிப்ட்' வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். முன்னதாக அவர், விமான நிலைய புதிய முனையத்தை சுற்றிப் பார்க்கிறார். இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு முனையங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலத்தில் செல்ல பகல் 2.50 மணியில் இருந்து 3. 15 வரை சுமார் 25 நிமிடங்கள் தடை விதிக்கப்படுகிறது. அந்த நேரம் மேம்பால பாதை மூடப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் முன்கூட்டியே சென்றடைய வேண்டும். பயணிகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் வருகை பகுதியில் இறங்கி, தரை வழியாக சென்று உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு 'லிப்ட்' வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நேரத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் மோடி பல்லாவரம் வருவதையொட்டி ஜி.எஸ்.டி. சாலையில் பிற்பகல் முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது

 

மேலும் படிக்க | தமிழில் ட்வீட்...! இந்தியில் பேனர்...!!

பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழி

ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்கு செல்லலாம். ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம். பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்கு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..