இயற்கையை பேணி காக்க வனவிலங்குகள் வேடமிட்டு அசத்திய தனியார் பள்ளி மாணவர்கள்...!

மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் இயற்கையை பேணி காக்க, வனவிலங்குகள் வேடமிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாணவர்கள்...!

இயற்கையை பேணி காக்க வனவிலங்குகள் வேடமிட்டு அசத்திய தனியார் பள்ளி மாணவர்கள்...!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கலந்து கொண்டு, விளையாட்டு விழா தீபத்தை ஏற்றி வைத்தார். முன்னதாக தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட எஸ்பி, புறாக்களை பறக்க விட்டு விளையாட்டு போட்டிகளையும் துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், பள்ளி மாணவர்கள் இயற்கையை பேணி காக்க வலியுறுத்தி யானை, டைனோசர், பட்டாம்பூச்சி, சிங்கம், கரடி, முயல், மலை பாம்பு போன்ற வனவிலங்குகளின் வேடமிட்டு நடந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மேலும் ஆதிவாசிகள் வேடத்துடன் வந்த மாணவ,  மாணவிகள் நடனமாடி அசத்தினர். 

அதேபோல் மாணவர்கள் எகிப்து பிரமிடுகளில் உள்ள சிலைகள் போன்ற வேடங்களில் வந்து அனைவரையும் ரசிக்க வைத்தனர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார், தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.