மத்திய அரசின் 5 சதவீத ஜிஎஸ்டி வரி: அரிசி ஆலைகள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!

மத்திய அரசின் 5 சதவீத  ஜிஎஸ்டி வரி: அரிசி ஆலைகள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!

மத்திய அரசின் 5 சதவீத  ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து அரிசி ஆலைகள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கவில்லை.

அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிப்பு:

தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அரிசி அத்தியாவசிய உணவாக இருந்து வருகிறது. இந்நிலையில், சண்டிகர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அரிசிக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட பிராண்டில் அரிசி விற்பனை செய்யும் பட்சத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். வரும் 18-ஆம் தேதி முதல் வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வால் அரிசி கிலோவுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலையேற்றம் பெறும். 

ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்:

இதனிடையே, ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். இதேபோல், நேரடியாக 1 லட்சம் பணியாளர்களும்,  மறைமுகமாக 3 லட்சம் பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இருந்து 150 அரிசி ஆலைகள் மற்றும் 150 அரிசி விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.