இரவிலும் தொடர்ந்த போராட்டம்... 300க்கும் மேபட்டவர்கள் கைது...

புதுச்சேரியில் இரவிலும் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்களை கைது செய்தனர்.

இரவிலும் தொடர்ந்த போராட்டம்... 300க்கும் மேபட்டவர்கள் கைது...

புதுச்சேரி: மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் 5 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே கடந்த 4 நாட்களாக பகல் நேரத்தில் மட்டும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஈடுபட்டு வந்த நிலையில் 5 வது நாளான இன்று இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலைந்து செல்ல காவல் கண்காணிப்பாளர் வம்சி தி ரெட்டி அறிவுருத்திய நிலையில், தொடர்ந்து மின்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தை ஊழியர்கள் தொடர்ந்ததால் துணை ராணுவப் படையினர் உதவியுடன் உள்ளூர் போலீசார் 300 க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்களை கைது செய்து கோரிமோடு பகுதியில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். இரவில் மின்துறை ஊழியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் நேரடியாக வந்த ஆதரவு தெரிவித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கைது செய்யப்பட்ட 300 க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் 2 மணி நேரத்திற்கு பின்னர் துணை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆஜர் படுத்திய பின்னர் அவர்களிடம் மின்துறை சொத்துக்களை சேதப்படுத்த மட்டோம், அற வழியில் போராடுவோம் என உத்திரவாதம் (bond) அளித்த பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தை மதசார்பற்ற கூட்டணிகள் தீவிரப்படுத்த உள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தெரிவித்தார் இதேபோல் போராட்டத்தை திவிரப்படுத்த உள்கதாகவும் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | மின்துறை ஊழியர்களை வார்னிங் செய்த தமிழிசை...!