"மீன்பிடித் திருவிழா" ஏராளமான மக்கள் பங்கேற்பு.. ஆர்வாரத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

"மீன்பிடித் திருவிழா" ஏராளமான மக்கள் பங்கேற்பு.. ஆர்வாரத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ச்சி!

அதிக பாசன நீர் நிலைகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்களை வளர்ப்பதும், நீர் வற்றியதும் அதனை பொதுமக்கள் பிடிப்பதும் மீன்பிடி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நெல் அறுவடைக்கு பின்னர் கண்மாய் வற்றும் சூழலில் உள்ள பாசன‌ கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி பொன்னமராவதி அருகேயுள்ள வேலூர் கிராமத்தில் உள்ள நல்லாண்டவர் கோயில் பெரிய குளத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாரம்பரிய முறையில்  ஊத்தா, வலை, பரி, கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு நாட்டுவகை மீன்களான கட்லா, விரால், ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை மக்கள் ஆரவாரத்துடன் பிடித்து மகிழ்ந்தனர்.