மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடைகள்..!

தமிழக திருக்கோயில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, திருக்கோயில் சார்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடைகள்..!

தமிழக திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், திருக்கோயில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவ்வாறு நடைபெறும் திருமணங்களில், திருக்கோயில் சார்பாக மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், திருக்கோயில் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களில், மணமக்களுக்கு திருக்கோயில் சார்பில் புத்தாடை வழங்கப்பட வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியினை, திருக்கோயில் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.