தமிழகத்தின் புதிய ஆளுனராக இன்று பதவி ஏற்கிறார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுனராக இன்று பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

தமிழகத்தின் புதிய ஆளுனராக இன்று பதவி ஏற்கிறார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுனராக இன்று பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

தமிழகத்தின் 14வது ஆளுனராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார்.  4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அவர் பஞ்சாப் மாநில ஆளுனராக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.  தமிழகத்தின் புதிய ஆளுனராக நாகாலாந்து மாநிலஆளுனர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து 12 மோட்டார் சைக்கிளில் போலீசார் அவரை அணிவகுத்து சென்னை, கிண்டி ராஜ்பவனுக்கு அழைத்து சென்றனர். 

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என். ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.