அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஆர்.எஸ் பாரதி…  

திமுக சார்பில் 10வது ஆண்டாக அண்ணா அறிவாலயத்தில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஆர்.எஸ் பாரதி…   

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதி உத்தரவின்படி  கடந்த 2011 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக  தேசிய கொடி ஏற்றப்பட்டது. அப்போது, திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலக்கட்டத்தில் தான், திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின்படி 64 வது சுதந்தினத்தையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. திமுக  அமைப்புச்செயலாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றினார்.

இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அண்ணா அறிவாலயத்தில் துணைப்பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி போன்ற இரண்டாம் கட்டத்தலைவர்கள் தான்  தேசிய கொடியை ஏற்றி் வந்தனர். திமுக தலைவராக இருந்த கருணாநிதியும் செயல் தலைவராக இருந்தார் மு க ஸ்டாலினும் தேசிய கொடியை ஏற்றியதில்லை.

இந்நிலையில் கடந்தாண்டு முதல் முறையாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கடந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த ஆண்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ எழிலன் அண்ணா அறிவாலயம் நிர்வாகிகள், மற்றும் திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.