முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு...ரூ.2.88 கோடி, 6.63 கிலோ தங்கம் பறிமுதல்.!!

முன்னாள் அதிமுக அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ 2.88 கோடி , 6.63 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு...ரூ.2.88 கோடி, 6.63 கிலோ தங்கம் பறிமுதல்.!!

அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன், அரசு நிதி முறைகேடு மூலமாக தனது பெயரிலும் உறவினர்களின் பெயரிலும் சொத்துக்களை குவித்திருப்பதாக, கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதனடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக 11,32,95,755 ரூபாய் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கே.பி அன்பழகனுக்கு சொந்தமான தர்மபுரியில் 53 இடங்கள், சென்னையில் 3 இடங்கள், சேலத்தில் 1 இடம் மற்றும் தெலுங்கானாவில் 1 இடம் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ. 2,88 கோடி , 6. 637 கிலோ கிராம் தங்க நகைகள், 13.85 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் ரூ. 2,65 கோடி  கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோதனையில் வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்ப்ட்டதாகவும், விரைவில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு சம்மன் அனுப்பி கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.