200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.. பொதுமக்கள் கடும் அவதி!!

200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.. பொதுமக்கள் கடும் அவதி!!

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பாரதிதாசன் நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பரவலாக கனமழை பெய்தது. இதனால் பாரதிதாசன் நகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வடிகால்கள் 90 சதவீதம் அடைப்பட்டு இருப்பதாலும், நீர் நிலைகளில் உபரி நீர் வெளியேற முடியாத அளவிற்கு மண் கொட்டி அடைத்திருப்பதாலும் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மழைநீர் வடிகால்களை தூர்வார கோரிக்கை

இதையடுத்து, நீர் வடிகால்வாய்களை தூர்வாரி அடுத்தடுத்த நிலைகளில் நீர் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.