தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி - அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டாம் : அன்புமனி ராமதாஸ் கண்டனம்!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் அதிகரிக்க படலாம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததற்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி - அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டாம் : அன்புமனி ராமதாஸ் கண்டனம்!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இதற்கான காரணங்களாக போக்குவரத்து துறையில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் இதற்கு காரணம் என சொல்லப்பட்டு வந்தது. அதில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை உச்சம் அடைந்த நிலையில் போக்குவரத்து துறையின் நஷ்டமோ பல மடங்கு அதிகரித்தது. 

இதன் காரணமாக முறையாக பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள இயலவில்லை என்றனர். இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சாடினார். மேலும், நிதி ஆதாரத்தைத் திரட்ட தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றும் இதனால் போக்குவரத்து, மின் கட்டணம் உயரும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார்.

இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, மக்களைப் பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் நிதி ஆதாரத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியிருந்தார்

இதுகுறித்து அன்புமனி ராமதாஸ் அத்தியாவசிய பொருட்களின் விலை  தொடங்கி, விலைவாசி உயர்வு காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு மேலும் அதிர்ச்சியைத் தருவதாகவே உள்ளது. இந்நிலையில், பேருந்து கட்டணம் குறித்து மக்களை அமைச்சர்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்த வேண்டாம் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். இது தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டும்! பேருந்து கட்டணம் மிக, மிக குறைந்த அளவில் உயர்த்தப்பட்டால் கூட அது மக்களை கடுமையாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறுகிறார், இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் பதிவிட்டு இருக்கிறார்.