மாலைமுரசு நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ராமசாமி காலமானார்

மாலை முரசு நாளிதழ் சென்னை பதிப்பில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி, வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

மாலைமுரசு நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ராமசாமி காலமானார்

மாலை முரசு நாளிதழ் சென்னை பதிப்பில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி, வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

மாலை முரசு நாளிதழில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ராமசாமி, காலம் தவறாமல், குறுகிய காலத்தில் விரைவாகச் செயல்பட்டு, குறித்த நேரத்தில் பத்திரிகையை வெளிக்கொண்டு வரும் ஆளுமைத்திறன் கொண்டிருந்தவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தமது 87-வது வயதில் காலமானார். அவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராமசாமியின் இறுதி ஊர்வலம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் என்றும், காலை 10 மணிக்கு உடல் தகனம் செய்யப்படும் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மாலைமுரசு நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ராமசாமி மறைவுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரை தொடர்ந்து பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளராக திகழ்ந்தவர் ராமசாமி என புகழாரம் சூட்டியுள்ள அவர், ஒரு மாபெரும் ஜாம்பவானை தமிழ் பத்திரிகை உலகம் இழந்து விட்டது பெரும் கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மறைந்த ராமசாமியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழிசை கூறியுள்ளார்.