பள்ளிக்கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குனர் நியமினம்...2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு செய்த மாற்றம்!

பள்ளிக்கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குனர் நியமினம்...2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு செய்த மாற்றம்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வித் துறைக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். 

திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே பள்ளிக்கல்வி துறையில் முழு அதிகாரங்களைக் கொண்ட ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. இதன் மூலம், 150 ஆண்டுகளாக இயக்குனர் பதவியில் இருந்த அதிகாரம் ஆணையருக்கு மாறியது. இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் இடையேயும், ஆசிரியர் சங்கங்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : ”நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருகிறது” - ஆளுநர் பெருமிதம்!

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் பதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனராக இருந்த மு.கண்ணப்பன், தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.