கட்டுமான பொருட்களின் விலையை குறைங்க.... இல்லன்னா சட்டப்படி நடவடிக்கை பாயும்!!

கட்டுமான பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் குறைக்கவில்லை என்றால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைப்பது தொடர்பாக கம்பி உரிமையாளர்களுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை ஏற்றத்தை அரசு ஏற்காது என்றும் தெரிவித்தார். மேலும், இதுவரை சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த விலை ஏற்றத்தை குறைக்க சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

கொரோனா காலத்தில் கட்டுமான பொருட்களின் அதீத விலை ஏற்றத்தை அரசு வேடிக்கை பார்க்காது என்றும் அரசின் நிலைப்பாட்டை உணர்ந்து உற்பத்தியாளர்களே தானாக முன்வந்து விலையை குறைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையென்றால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்