கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,  அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ஆக்ஸிஜன் அளவு 94 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது எனவும் மாறாக வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆக்ஸிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பின், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழாக இருப்பின், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.