அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு தர கோரிக்கை :  வந்த வேகத்தில் திரும்பி சென்ற ஆயுதப்படை வீரர்கள் !!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்கு வரப்பட்ட ஆயுதப்படை வீரர்கள், வந்த உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு தர கோரிக்கை :  வந்த வேகத்தில் திரும்பி சென்ற ஆயுதப்படை வீரர்கள் !!

அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் திருமண மண்டபத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆவடி காவல் ஆணையர் அகத்தில் புகார் அளித்தார். பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இல்லங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஒற்றை தலைமை குறித்தான விவாதம் எழுந்த நாளில் இருந்து அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு தொண்டர்கள் கோஷங்கள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் எம்ஜிஆர் மாளிகை அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் ஆயுதப் படை பிரிவில் உள்ள  Mobile incident comment படை பிரிவினர் 70 பேர் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டனர். ஆயுதப்படை காவல் படையினர் பேருந்திலிருந்து இறங்கிய உடன் அங்கிருந்து வேறு பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் கேட்டபோது அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டி இதுவரை விண்ணப்பம் ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் வேறு சில இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லும்போது மாற்றி இங்கு வந்ததாக தெரிவித்து புறப்பட்டு சென்றனர். அதிமுக அலுவலகத்தில் ஏதும் பிரச்சினை ஈடுபட்டால் பாதுகாப்பிற்காக அருகிலுள்ள திருமண மண்டபத்தில் (ஹேமமாலினி) ஆயுதப் படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.