தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது

ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த  ,10 பவுன் நகை, 19 ஆயிரம் பணம் பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது

ராமேஸ்வரத்தில் உள்ள பாரதி நகர், செம்மமடம், மல்லிகை நகர், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்கள்  இல்லாத வீடுகளை நோட்டமிட்டும், குழந்தைகள்  மட்டுமே இருக்கும் வீடுகளை கண்காணித்து வந்த மர்மநபர் ஒருவர் அந்த வீட்டின் உள்ளே சென்று திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கச்சிமடம் பகுதியில் மர்மநபர் ஒருவர், வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சிப்பதாக போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவருடைய கை ரேகையும், திருடுபோன வீடுகளில் எடுக்கப்பட்ட கைரேகையும் ஒன்றாக இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் மேற்க்கொண்ட விசாரணையில், கடந்த சில வாரங்களாக ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடியது நான் தான் என அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 10 பவுன் தங்க நகை, லேப்டாப், இரண்டு ஜோடி வெள்ளி கொலுசு, 19,000 ரூபாய்  பணம் உள்ளிட்டவற்றை    பறிமுதல் செய்தனர்.