தீபாவளி சிறப்பு பேருந்து மூலம் ரூ.9கோடி வருமானம்.. சென்னை திரும்ப 13,150 பேருந்துகள் இயக்கம்..!

தீபாவளி சிறப்பு பேருந்து மூலம் ரூ.9கோடி வருமானம்.. சென்னை திரும்ப 13,150 பேருந்துகள் இயக்கம்..!

சிறப்பு பேருந்துகள்:

இந்த வருடம் தீபாவளி பண்டிகை கடந்த 24-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 
வருடந்தோறும் தீபாவளி பண்டியைகை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு 
பேருந்துகள் விடுவது வழக்கம். 

16,888 பேருந்துகள் இயக்கம்:

அந்த வகையில் இந்தாண்டும் தீபாவளியை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 16,888 பேருந்துகளும், சென்னைக்கு திரும்ப 13,150 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. 

ரூ.9கோடி வருமானம்:

அப்படி இயக்கப்பட்ட பேருந்துகளில் 2 கோடியே 80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், அதன் மூலம் சுமார் ரூ.9கோடி வருமானம் கிடைத்திருப்பதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

173கோடி பெண்கள் இலவச பயணம்:

அதேபோன்று பெண்களுக்கான இலவச பேருந்து சேவையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை 173கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.