அக்.6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்... 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடத்த ஏற்பாடு...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்  இன்று வெளியிடப்படுவதுடன், அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அக்.6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்... 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடத்த ஏற்பாடு...

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது.  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுமார் ஒரு லட்சம்  பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த  மனுக்கள் மீதான பரிசீலனை 23-ம் தேதி தொடங்கிய  நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு  இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.