சந்தோஷமும்...! சோகமும்...! ஒருசேர அனுபவிக்கும் ... சங்கரன்கோவில் மக்கள்....

சந்தோஷமும்...! சோகமும்...! ஒருசேர அனுபவிக்கும் ...  சங்கரன்கோவில் மக்கள்....

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதிகளான களப்பாகுளம் இருமன்குளம் குருக்கள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை  பெய்தது. இந்த கனமழையால் கோடையின் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
 மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்த  அதே சங்கரன்கோவில் பகுதியில் பிரதானமான தக்காளி வியாபாரத்தில் ஏற்படும் பாதிப்பால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

சங்கரன்கோவில் பகுதிகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்....

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும்.  தற்போது தக்காளி அதிகளவில்  பயிரிட்டுள்ளனர். அதனை தற்போது சாகுபடி செய்து விற்பனைக்காக சங்கரன்கோவில் காய்கறிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்ற நிலையில் தக்காளி வரத்து அதிகமாக உள்ள போதிலும் தக்காளியை வாங்குவதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்  மூன்று ரூபாய்க்கு கூட வாங்க வராததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். தங்களது வாழ்வாதாரமே தக்காளி சாகுபடியில் தான் உள்ளதெனவும்  அதன் வியாபாரம் பாதிக்கப்படும்போது  மிகுந்த வேதனை அளிக்கிறது என விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்...
-------------------------------------------------