இதை செய்ய ஒரு மனசு வேணும்- முதல்வரை பாராட்டிய சரத்குமார்

இதை செய்ய ஒரு மனசு வேணும்- முதல்வரை பாராட்டிய சரத்குமார்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பிபிகிட் அணிந்து சென்று பார்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டினார்.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவை இ. எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருக்கும் வார்டுக்கு  கவச உடை அணிந்து சென்று நலம் விசாரித்தார்.இதனை நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தது மட்டுமன்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செயல்பட்டதை வரவேற்கிறேன் என்றுள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக தலா 5 லட்சம் வங்கியில் வைப்புத்தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையானபணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.