சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட சசிகலா..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வரும் சசிகலா பல்வேறு ஆலயங்களுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டு வருகிறார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட சசிகலா..!

இந்நிலையில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலகாமாக விளங்கும்  திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.  சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சமயபுரம் ஆலயத்திற்கு முன்பாக குவிந்திருந்தனர். தொண்டர்களின் வரவேற்புக்கு மத்தியில் சாமி தரிசனம் செய்தார் சசிகலா.