12ஆம் வகுப்பு தேர்வு குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே  இறுதி முடிவு ...

12 ஆம் வகுப்பு  தேர்வு குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே  இறுதி முடிவு  அறிவிக்கப்படும்  என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.

12ஆம் வகுப்பு தேர்வு  குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே  இறுதி முடிவு ...

சென்னை தலைமை செயலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,பிளஸ்டூ தேர்வு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்  மற்றும் பொதுமக்களிடமிருந்து  வந்த கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். எனினும் தேர்வு நடத்துவது குறித்து . சட்டமன்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

அதைதொடர்ந்து  மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்பட உள்ளதாகவும்  கூறினார். மேலும் அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் இறுதி  முடிவை  முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு  முடிவெடுக்கும் என குறிப்பிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்த பிரதமர், நீட் தேர்வை ரத்து  செய்யாதது ஏன் என வினவினார்.

முன்னதாக பிளஸ்டூ பொது தேர்வு  தொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த  இரண்டு நாட்களாக  கருத்துக்கேட்பு  கூட்டம் நடத்தப்பட்டது. இதில்  60  சதவீத பெற்றோர் 12 ஆம் வகுப்பு  தேர்வை நடத்த வேண்டும் என ஆதரவு  தெரிவித்திருந்த  நிலையில்  மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் ஆலோசனை நடத்தினர்.  அதன் பிறகு  கல்வியாளர்களின் கருத்துக்களையும் அமைச்சர் கேட்டறிந்தார்.