ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் குதித்து விளையாடும் பள்ளி சிறுவர்கள்..!

ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் குதித்து விளையாடும் பள்ளி சிறுவர்கள் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் குதித்து விளையாடும் பள்ளி சிறுவர்கள்..!

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியிலிருந்து படிப்படியாக குறைந்து தற்போது இன்றைய காலை நேர நிலவரப்படி 20000 கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நீரின் வேகத்தை கணக்கிட முடியாது என்பதால் ஆற்றில் குளிக்கவும், குதிக்கவும், மீன் பிடிக்கவும் வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி நேற்று விடுமுறை தினம் என்பதால் திருச்சி காவேரி பாலத்தில் பள்ளி சிறுவர்கள் 10க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றின் பாலத்தில் கைப்பிடி சுவரில் ஏறி நின்றும் நடனமாடியும், பின்னர் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து விளையாடி மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறக்கப்படும் பட்சத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முசிறியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர், அதேபோன்று ஜீயபுரம் மற்றும் திருவெறும்பூர் பகுதியில் காவிரிஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகி வரும் நிலையில், எச்சரிக்கையையும் மீறி இதுபோன்று ஆற்றில் குதித்து விளையாடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.