ஆளுநர் உளறி கொட்டுகிறார்...கோவை வழக்கை என்.ஐ.ஏவிடம் ஏன் தூக்கி கொடுத்தீர்கள்? சீமான் கேள்வி!

ஆளுநர் உளறி கொட்டுகிறார்...கோவை வழக்கை என்.ஐ.ஏவிடம் ஏன் தூக்கி கொடுத்தீர்கள்? சீமான் கேள்வி!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

சீமான் மரியாதை:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜையை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”உண்மையை பேசு, உறுதியாக பேசு, அதை உரக்க பேசு என எங்களை போன்ற இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு கற்பித்த பெருந்தகை, மலர்மாலைக்கு கழுத்தை நீட்டுவது போல மரண படுக்கைக்கு எவன் கழுத்தை துணிந்து நீட்டுகிறானோ அவனே உண்மையான வீரன் என்று மான தமிழ் மக்களுக்கு போதித்த மகத்தான பெருமகன்” எங்கள் தெய்வதிருமகனார் முத்துராமலிங்கனார். அவரது புகழை போற்றுவதில் பெருமை கொள்வதாக பேசினார்.

இதையும் படிக்க: பட்டியலின மக்களுக்காக கடைசி வரை போராடியவர் - டி.ஆர்.பாலு புகழாரம்!

ஆளுநர் உளறி கொட்டுகிறார்:

தொடர்ந்து, இந்தியா என்ற நாடு ரிஷிகளால் கட்டப்பட்டது என்று ஆளுநர் கூறியது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், ஆங்கிலேயர்கள் என்ன ரிஷியா? 
நாடு கட்டுவது ரிஷியின் வேலையா? எதையாவது பேச வேண்டும் என்பதற்காக ஆளுநர் உளறி கொட்டுவதாக குற்றம் சாட்டினார்.

NIA விடம் ஏன் தூக்கி கொடுத்தீர்கள்?:

அதைத்தொடர்ந்து, மாநில சுயாட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், மாண்புமிகு 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு சென்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார். பாஜக ஆளுநரை வைத்துக்கொண்டு இரட்டை ஆட்சி முறையை நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால், கோவை சம்பவத்தில் இங்கே உளவுத்துறை, காவல்துறை என பலவற்றை வைத்துக்கொண்டு NIA விடம் ஏன் தூக்கி கொடுத்தீர்கள்? மாநிலத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பி செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசினார்.