"மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்?'' சீமான் கேள்வி!

"மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்?'' சீமான் கேள்வி!

"மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்" என தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

மே 18ம் தேதி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் "இன எழுச்சி மாநாடு" நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக சென்னையிலிருக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களிடம் பணம் வாங்கி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றால் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி அப்போதே பதவி விலகி இருக்க வேண்டும் என்ற அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடியும் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு இறந்தால் நான் 10கோடி வழங்குகிறேன் என்றார்.

தொடர்ந்து, திமுகவின் சொத்து பட்டியலை மட்டும் வெளியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!