நீர்வரத்து அதிகரிப்பால் கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி...விவசாயிகள் மகிழ்ச்சி!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து கடல் போல் காட்சி அளிப்பது காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

நீர்வரத்து அதிகரிப்பால் கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி...விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு வந்தடைந்ததையடுத்து, அங்கிருந்து இணைப்புக் கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 788 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில், புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு கூடுதல் நீர் அனுப்பி வைக்கப்பட்டு  வருகிறது.

வினாடிக்கு 460 கனஅடி வீதம் தண்ணீர் வருவதால்  24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 20 புள்ளி 95 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்தால் ஒரு வாரத்திற்குள் ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரி நீரேற்று நிலையம் மூலமாக சென்னை குடிநீர் தேவைக்கு  வினாடிக்கு 108 கன அடியும், பாசனத்திற்காக 20 கனஅடியும், சிப்காட் தேவைக்கு 3 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.