செங்கோட்டையில் சோதனை ரயில்...! நூறாண்டு பாரம்பரியம்...!

செங்கோட்டையில் சோதனை ரயில்...! நூறாண்டு பாரம்பரியம்...!

தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள நூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க ரயில்வே வழித்தடத்தில் 
இலகு ரக பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடந்தது. 

தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புனலூர் ரயில் நிலையம் வரை புதிய வகை இலகு ரக ரயில் பெட்டிகளை இணைத்து ரயிலை இயக்கி சோதனை ஓட்டமானது நடைபெற்றது.

நூறு ஆண்டு பாரம்பரியம்;... 

சுமார் நூறு ஆண்டுகள் பாராம்பரியமிக்க இந்த வழித்தடத்தில் கடந்த 2012-ஆம் வருடம் மீட்டர் கேட்ச் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றி ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது இந்த வழித்தடத்தில் மின்மயமாக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில், தற்போது இலகுரக பெட்டிகளை எர்ணாகுளம்- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கொல்லம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களையும்  இணைத்து இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 இதையும் படிக்க;... ஊழல் செய்யும் ஊராட்சிமன்றத் தலைவர்....! ஊர் மக்கள் கண்டனப் போராட்டம்..!

இந்த நிலையில், முன்னதாக இந்த வழித்தடத்தில் முதல் முதலாக இலகு ரக பெட்டிகளை இணைத்து செங்கோட்டை முதல் புனலூர் இடையான வழித்தடத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டத்தின் போது, ரயில்வே துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்த நிலையில், முற்றிலும் மலைப்பகுதியான இந்த ரயில்வே தடத்தில் இலகு ரக பெட்டிகளை வைத்து ரயிலை இயக்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? அப்பகுதியில் உள்ள சிதோசன நிலைக்கு ஏற்ப பெட்டிகள் உள்ளனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

 இதையும் படிக்க:.. நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற வேண்டும் - தலைமை செயலரிடம் அதிமுக மனு