தாயிடம் இருந்து குழந்தையை பிரிப்பது துன்புறுத்தும் செயல்.. உயர்நீதிமன்றம் கருத்து..!

பிரிந்த தம்பதியரால் குழந்தைகள் தீய உலகத்துக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக வேதனை..!

தாயிடம் இருந்து குழந்தையை பிரிப்பது துன்புறுத்தும் செயல்.. உயர்நீதிமன்றம் கருத்து..!

இரு மகன்களும் வேண்டும்:

கணவரை விட்டுப் பிரிந்த மனைவி ஒருவர்,  இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குழந்தைகள் கெட்டுப்போக வாய்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்த தம்பதியரால் குழந்தைகள் தீய உலகத்துக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவித்தார். 

உடல் இன்பதுக்காக மட்டுமல்ல:

திருமணம் என்பது சந்ததியினரை உருவாக்கத்தானே தவிர, உடல் இன்பத்துக்காக மட்டுமல்ல எனவும், குழந்தைகளிடம் இருந்து தாயை பிரிப்பது அவர்களை துன்புறுத்தும் செயல் எனவும் குறிப்பிட்டார். 

குழந்தையை பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல்:

குழந்தையை பிரிப்பது தனக்கு எதிராக திருப்புவதைப் போன்றதாகும் எனவும் அது ஒரு மனிதாபிமானமற்ற செயல் எனவும் கூறிய நீதிபதி, இரு குழந்தைகளையும் தாயின் தற்காலிக கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவிட்டார்.