பொதுத் தேர்வுகளை எழுதாத 1.18 லட்சம் மாணவர்கள் : காரணம் என்ன? - பள்ளிக்கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல் !!

குழந்தைத் திருமணம் புரிவது, பாலிடெக்னிக், ITI படிப்புகளில் சேர்ந்ததே 1.18 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வராமல் போனதற்கு காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பொதுத் தேர்வுகளை எழுதாத 1.18 லட்சம் மாணவர்கள் : காரணம் என்ன? - பள்ளிக்கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல் !!

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 பேரும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 43,533 பேரும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,674 பேரும் என்று 1,18,231 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் 26,77,503 மாணவர்கள் 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட சமூக - பொருளாதார நெருக்கடி காரணமாக 1,18,231 பேர் பொதுத்தேர்வில் பங்கேற்க இயலாத அவலம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியால் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிலர் பள்ளிப்படிப்பை கைவிட்டு ITI, பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்ந்துவிட்டதும் 1. 18 லட்சம் மாணவர்களின் ஆப்சென்டுக்கு காரணமாக உள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டில் 1.80 லட்சம் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், 1.18 லட்சம் பேரின் இடைநிற்றல் அதிர்ச்சியளிப்பதாகவும், வரும் ஆண்டுகளில் இடைநிற்றலைத் தவிர்க்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.