மதுக்கடையை அகற்றுவதற்கான பொதுமக்களிடம் கையெழுத்து நிகழ்ச்சி!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சார்பில் மதுக்கடையை அகற்றுவதற்கான பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுக்கடையை அகற்றுவதற்கான பொதுமக்களிடம் கையெழுத்து  நிகழ்ச்சி!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது மண்டலத்தில் உள்ள 128 வது வார்டு மன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்கள் தலைமையில்  தேனாம்பேட்டை பகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் சாலையில் இயங்கி வரக்கூடிய டாஸ்மாக்(824  கடையை அகற்றக்கோரி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் கையெழுத்து பெரும் நிகழ்வு நடைபெற்றது 

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் சோதனை...பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

இந்தப் பகுதியில் 3 பள்ளிகள் இயங்கி வருவதாகவும் 200 மீட்டர் தொலைவில் உள்ள அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றும் ஏற்கனவே நெரிசல் பகுதியாக உள்ள இந்த சாலையில் தற்பொழுது டி டி கே சாலையில் நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக மாநகரப் பேருந்துகளும் இயங்கி வருவதாகவும் ஆகையால் நெரிசல் மிகுந்த இப் பகுதியில் டாஸ்மாக் கடையின் மூலமாக அதிக நெரிசல் ஏற்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது

மேலும் படிக்க | மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி!


இதன் காரணமாக திருவள்ளூர் சாலையில் உள்ள பொதுமக்களிடம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கையெழுத்து பெறப்பட்டு அந்த மனுக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் டாஸ்மாக் இயக்குனருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்