35  நிறுவனங்களுடன் 17 ஆயிரத்து 141 கோடி  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து...

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட  35  நிறுவனங்களுடன் 17 ஆயிரத்து 141 கோடி  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

35  நிறுவனங்களுடன் 17 ஆயிரத்து 141 கோடி  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து...

தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில்  காணொலி மூலம்  பேசிய  மு.க.ஸ்டாலின்:ஐஐடிக்கள் நமது வளர்ச்சியில் பெருமைப்படத்தக்க வகையில் பங்காற்றியுள்ளதாக  பெருமிதம் தெரிவித்தார்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிப்பதுடன், தொழில்வளர்ச்சிமிக்க மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என ஸ்டாலின் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் 17 ஆயிரத்து141 கோடி  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளதாகவும் 

இதனால் 55,000 புதிய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக புதிய கொள்கைகளை வகுத்து வருவதோடு, ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.