8 குண்டுகள் முழங்க அரசு மரியாதை...வாணி ஜெயராம் உடல் தகனம்...முதலமைச்சர் அறிவிப்பு!

8 குண்டுகள் முழங்க அரசு மரியாதை...வாணி ஜெயராம் உடல் தகனம்...முதலமைச்சர் அறிவிப்பு!

மறைந்த திரைப்பட பாடகி வாணி ஜெயராம் உடல் அரசு மரியாதையுடன் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வாணி ஜெயராம் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி :

பிரபல திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, 2 அடி உயரம் உள்ள பழமையான மேசை மீது விழுந்து தலையில் பலமாக அடிபட்டதால் தான் வாணி ஜெயராம் உயிரிழந்ததாகவும், அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இதையும் படிக்க : இன்று 7 மணிக்குள் சமர்பிக்க உத்தரவு...ஆனால் ஓபிஎஸ் கேட்ட கேள்வி... அப்போ அதிமுக வேட்பாளர் யார்?

அரசு மரியாதையுடன் தகனம் :

இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 8 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாணி ஜெயராமின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அண்ணாமலை அஞ்சலி :

இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அண்ணாமலை, வாணி ஜெயராமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.