வேங்கை வயல் விவகாரம் காலம் தாழ்த்தினால் சமூக நீதி அரசுக்கு அழகல்ல - திருமா

வேங்கை வயல் விவகாரம் காலம் தாழ்த்தினால் சமூக நீதி அரசுக்கு அழகல்ல - திருமா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் "மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்" (State Level Vigilance and Monitoring)நடைபெற்றது.

தொல். திருமாவளவன் பேசியதாவது 

வேங்கை வயல் விவகாரத்தில் காலம் தாழ்த்த கூடாது.அது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்பதை கூட்டத்தில்  காட்டி உள்ளதாக கூறினார். பஞ்சமி நிலத்தை கண்டறிய கலைஞர் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் விழுப்புரம் ,தென்னாற்காடு மாவட்டத்தில் இருளர்,குறவர் சமூதயதினர் மீது பொய், திருட்டு வழக்கு போடபடுவதை கை விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என கூறினார். காவல்துறையிடம் தலித் எதிர்ப்பு உளவியல் மேலோங்கி உள்ளது என கூறினார்..

மேலும் படிக்க | கர்நாடக தேர்தலில் போட்டியிடமாட்டார்...நான் போட்டியிடுவேன் - ஜெகதீஷ் ஷெட்டர்!

கள்ளகுறிஞ்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன் உதவியாளரை காலணிகளை எடுத்து தர சொல்லியது குறித்த கேள்விக்கு மாவட்ட ஆட்சியருக்கும் சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உச்ச நீதி மன்றம் முன்பு அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும் என்று விசிக கோரிக்கை வைத்து வருகிறது.வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம் என கூறினார்.

தெலுங்கானாவில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை எனவும் பேசி முடித்தார்.