குரூப் 4 தேர்வுகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

குரூப் 4 தேர்வுகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுகளுக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துத்துறை கழகம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாளர்களை அமர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் என்றழைக்கக்கூடிய டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் முக்கியமாக குரூப் தேர்வுகள் பார்க்கப்படுகிறது. அந்த குரூப் தேர்வுகளில் குரூப் 4 மற்றும் 2 ஆகிய தேர்வுகளுக்கு எழுதக்கூடியவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து காணப்படுகிறது.

குரூப் 4 தேர்வு:

சிஏஓ, எழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட அரசு பணிகளில் பணியமர்த்துவதற்காக தான் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.

நாளை குரூப் 4 தேர்வு:

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வுகள் நடைபெறவுள்ளது. பொதுவாக குரூப் 4 தேர்வுகள் வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.  அதன்படி வார இறுதியான நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

சிறப்பு பேருந்துகள்:

குரூப் 4 தேர்வுகள்  நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையின்படி தேர்வு மையங்களின் எண்ணிகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். 

மேலும் தேர்வு மையங்களில் சிறப்பு பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்திருக்கின்றனர். 

போக்குவரத்து அதிகரிப்பு:

தமிழகம் முழுவதும் அதிகப்படியான தேர்வர்கள் தேர்வு எழுதக்கூடிய தேர்வாக குரூப் 4 பார்க்கப்படுகிறது. அந்த அளவில் சிற்றூர்களில் இருந்து வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கு ஏதுவாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் தேவைக்கேற்ப போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.