தாம்பரம் - கன்னியாகுமாி இடையே சிறப்பு ரயில் இயக்கம்...தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம் - கன்னியாகுமாி இடையே சிறப்பு ரயில் இயக்கம்...தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக படையெடுக்கின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப தெற்கு ரயில்வே தாம்பரம் - கன்னியாகுமரி இடையே வரும் 28 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க : எங்கள் ஆட்சியில் முறைகேடு எங்கு நடந்தாலும்...அதற்கான பரிகாரத்தை துறை காணும்...!

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாகவும், இந்த ரெயில் வரும் 28-ம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் வழியாக மறுநாள் காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என்று தெரிவித்துள்ளது.