தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு! மீனவர் படுகாயம்!!

கோடியக்கரையில், மீன்பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய நிலையில், மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த  கலைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் கடந்த 28ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் மைல் தூரத்தில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் கலைச்செல்வன் என்பவருக்கு தலையின் இடதுபக்கம் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றதும் படகை வேகமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மீனவர்கள் இயக்கினர்.

இதைத்தொடர்ந்து, காயமடைந்த கலைச்செல்வனை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் 
மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் மீதான தாக்குதல் நாகப்பட்டினம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.