தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்... பயங்கர ஆயுதங்களுடன் மீனவர்கள் மீது தாக்குதல்...

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்... பயங்கர ஆயுதங்களுடன் மீனவர்கள் மீது தாக்குதல்...

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்று மதியம் சிவகுமார் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அண்ணன் சிவா அவரது தந்தை சின்னத்தம்பி ஆகிய மூன்று பேருடன் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது கோடியக்கரை தென்கிழக்கே  நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 பைபர் படகில் அவ்வழியாக வந்த  கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் சிவகுமார் தலையில்  வெட்டுக்காயம் விழுந்தது. மேலும் சிவா மற்றும் சின்னத் தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இலங்கை கடற் கொள்ளையர்கள் இவர்களிடமிருந்த 400 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல் உள்ளிட்ட 4 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் மூவரையும் மீட்ட சக மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆறுகாட்டுத்துறை  மீனவர்கள் தொடரும் இலங்கை கடற் கொள்ளையர்களின் தாக்குதலை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.