மேகதாது விவகாரத்தில் தமிழக நிலைப்பாட்டை ஸ்டாலின் ஆணித்தரமாகத் தெரிவிப்பார்.! அமைச்சர் துரைமுருகன் பேச்சு.! 

மேகதாது விவகாரத்தில் தமிழக நிலைப்பாட்டை ஸ்டாலின் ஆணித்தரமாகத்  தெரிவிப்பார்.! அமைச்சர் துரைமுருகன் பேச்சு.! 

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஆணித்தரமாக தெரிவிப்பார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த மாதம் நடைபெற்ற காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்திலும், தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், மேகதாதுவில் அணைகட்டுவதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். 

இந்நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மேகதாது அணை கட்டுவதால் தமிழகம், கர்நாடகா ஆகிய இருமாநிலங்களும் பயன்பெறும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடக முதலமைச்சரின் கடிதம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாக தெரிவிப்பார் எனக் குறிப்பிட்டார். மேலும் மேகதாது அணை தொடர்பாக ஒன்றிய அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.