மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும்... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும்... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கபடவில்லை என்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் மட்டுமே உணவு வழங்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாவதாக குறிப்பிட்ட  நீதிபதிகள், பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என அரசுக்கு  உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.