இரவோடு இரவாக மூடப்பட்ட தலைவர்களின் சிலைகள்...... காரணம் என்ன?!!

இரவோடு இரவாக மூடப்பட்ட தலைவர்களின் சிலைகள்...... காரணம் என்ன?!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து,  இரவோடு இரவாக மூடப்பட்ட தலைவர்களின் சிலைகள்.
                                                 
இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமான நிலையில், இந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விதிமுறைகள்:

அறிவிப்பு வெளியான உடனேயே இந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து பொது இடங்களில் உள்ள முக்கிய தலைவர்களின் உருவப்படங்கள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.

பச்சை நிற துணியால்..:

இந்நிலையில் ஈரோடு நகரின் முக்கிய பகுதியான பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள பெரியார், அம்பேத்கர், அண்ணா,  கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகளை, ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக பச்சை நிற துணிகளைக் கொண்டு மூடினர்.

இரவில்... :

மேலும் அந்த தலைவர்களின் பெயர் பலகைகள் மற்றும் அவர்கள் பெயர்கள் எழுதி பதிக்கப்பட்ட கல்வெட்டுக்களையும் மூடினர்.

முக்கிய தலைவர்களின் சிலைகள்  பகல் நேரத்தில் மூடப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இந்த சிலைகள் இரவு நேரத்தில் துணிகளால் மூடப்பட்டது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  உலக அளவில் இரண்டாமிடம்....தமிழ்நாடு மாணவி சாதனை.....