நீட் தேர்வு அச்சத்தால் தீக்குளித்த மாணவி: 27 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்த சோகம்...

நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற அச்சத்தில் தீக்குளித்த மாணவி 27 நாட்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தீக்குளித்த மாணவி: 27 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்த சோகம்...

நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர்  12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார்ஒரு லட்சத்து 10 ஆயிரம்  மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்.  செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். சேத்துப்பட்டு எம்.சி.சி.. பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மனைவி ஷீபா மாடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனு நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்வை சரியாக எழுதவில்லையோ என்ற  அச்சம் காரணமாக  கடந்த மாதம் 17ஆம் தேதி தீக்குளித்தார்.

உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அவர் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 27 நாட்களாக  அனுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார்.