" குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்..! "....! -திருச்சியில் விழிப்புணர்வு பேரணி....!

" குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்..! "....! -திருச்சியில்  விழிப்புணர்வு பேரணி....!

திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில்  உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

"அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்"...

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் பகுதியில், துவாகுடியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அங்கு  மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. அதில்,  "குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்",   என்ற வசனங்கள் பொருந்திய பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இந்த பேரணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். மற்றும், மாவட்ட கல்வி அலுவலர் பேபி முன்னிலை வைத்தார். 

இந்த விழிப்புணர்வு பேரணியில் துவாக்குடி வடக்கு மலை நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா பாடநூல்கள், குறிப்பேடுகள்  சீருடைகள்  எழுதப் பொருட்கள், புத்தகப்பை, காலனி, சத்துணவு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் தெரிவித்தார்.  

இதையும் படிக்க   }  12 மணி நேர வேலை திமுகவின் தொழிற்சங்கமான தொமுச எதிர்ப்பு...!!

அதோடு, கணினி வழி கல்வி, ஆங்கில புலமை பயிற்சி, தையல் பயிற்சி, ஓவிய பயிற்சி, சிலம்ப பயிற்சி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி, ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புக்கு ஒரு ஆசிரியர் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடத்திற்கு ஒரு ஆசிரியர் போன்று மேலும் பல  சிறப்பு அம்சங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.  முன்னதாக திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் நன்றி கூறினார்.

இதையும் படிக்க   } கடல் -ல தான பேனா சிலை வைக்கக்கூடாது...? கட்டுன வீட்டுல வைக்கலாம்ல...?