மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும்... தா.வேலு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்...

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி உயிரிழந்தது மிகுந்த வருத்ததை அளிப்பதாகவும், தேர்வுக்கு அஞ்சாமல் மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு தெரிவித்துள்ளார்.

மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும்... தா.வேலு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்...

அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வு எழுதிய பிறகு தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேள்விப்பட்டு மிகுவும் மன வருத்தம் அடைகிறேன்.  நீட் தேர்வினால் மாணவ மாணவிகள் அஞ்ச வேண்டாம் என கேட்டு கொண்டார்.

தமிழக முதல்வர் இருக்கும் வரையில் மாணவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும். எனவே நீட் சரியாக எழுதவில்லை மன உளைச்சல் ஆகி தற்கொலை செய்து கொண்டோம் என்ற நிலைக்கு செல்ல வேண்டாம் என மாணவ மாணவிகளுக்கு கோரிக்கை வைத்தார்.  

தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்றும், தமிழக முதல்வர் நன்றாக வழிநடத்தி சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர், நேற்றையதினம் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக நல்ல செய்தி வரும் எப்படியாவது நீட் தேர்வு ஒழிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.